வாடகை வீட்டில் அத்துமீறல்
புழல், காவாங்கரை பகுதியில் உள்ள நீலகண்டன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு வாடிக்கையாளர் போன்று சென்ற போலீசார், அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அதிரடியாக களத்தில் இறங்கி அங்கிருந்த இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக விக்ரம் என்ற நபரை புழல் போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டை வாடகைக்கு எடுத்து அக்கம் பக்கத்தினருக்கு கூட தெரியாமல், பாலியல் தொழில் நடத்தியது அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.