பிளேடை தின்ற சிறைக்கைதி
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ரயில்வே போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எண்ணூரை சேர்ந்த பாபுலால் (35) என்ற கைதி திடீரென ப்ளேடு துண்டு, பேனா மூடி ஆகியவற்றை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பாபுலாலை கண்ட சக கைதிகள் அளித்த தகவலின் பேரில் சிறை காவலர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறை கைதி ஒருவர் ப்ளேடு துண்டை விழுங்கி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சிறை காவலர்கள் சோதனையின் போது கைதிகள் வெங்கடேஷ், ஆகாஷ் ஆகிய இருவர் பதுக்கி வைத்திருந்த 2செல்போன்கள் சிக்கின. இதே போல மணிகண்டன் என்ற கைதி பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.
இந்த 3சம்பவங்கள் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகார்களின் பேரில் புழல் போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.