பிரபாஸின் புதிய படம் துவக்கம்
பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று சிறப்பாக நடந்தது.
‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ என அடுத்தடுத்து வெற்றி பெற்ற படங்களில் நடித்த பிரபாஸ் அடுத்ததாக இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிக்கிறார்.
கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பான் இந்திய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ் , ஹனு ராகவபுடி மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதன்முறையாக இந்த படத்தில் இணைகிறார்கள்.
இந்த கதை – ஒரு போர் வீரன். தனது தாய் மண்ணின் மக்களுக்காக.. அவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக எழுதப்பட்டிருக்கிறது. 1940களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்று புனைவு கதை ஒரு போர் வீரனின் கதை.
இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை இமான்வி நடிக்கிறார். இவர்களுடன் புகழ்பெற்ற பிரபல நடிகர்களான மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபாஸ் ஹனு என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் பிரபாஸ் மற்றும் இமான்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.