செய்திகள்

விஜய்யின் ‛கொடி‛யும் ‛கோட்’டும்

சென்னை, ஆக. 18-

நடிகர் விஜய் துவங்கி உள்ள, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியை, விரைவில், தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறார்.

அவர், விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது ரசிகர் மன்றத்தை, இந்தாண்டு பிப்ரவரி, 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியாக, அதிகாரப்பூர்வமாக மாற்றினார்.

அரசியல் கட்சி துவங்கிய நிலையில், அவர் நடித்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும், ‛கோட்’ படத்திற்கான எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

கட்சி துவங்கிய நிலையில், அவரது இலக்கு, 2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தல் என்றாலும், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலை, அவரும், அவரது கட்சியினரும் கூர்ந்து கவனித்தனர்.

மேலும், அவர் கட்சியின் கட்டமைப்பு பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவம் என, மக்கள் சந்திப்பை மேற்கொண்டார்.

‛கோட்’ என்ற ‛தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படம், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி, வரும், 22ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதற்கான விழா, பனையூரில் உள்ள, நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் நடக்க உள்ளதாக, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கட்சிக்கொடியை, விஜய் அறிமுகப்படுத்துகிறார்.

‛கோட்’ படம் வெளியீடு, அவரது கட்சி கொடி அறிமுகம் என இரட்டை உற்சாகம் அவரது ரசிகர், கட்சியினர் மட்டுமின்றி, தமிழக மக்களிடையிலும், ‛சுனாமியாக’ எகிறி உள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 3 seconds