தற்காப்பு கலை போட்டி தமிழக மாணவர்கள் ‛அசத்தல்’
சென்னை, ஆக. 17- தேசிய அளவிலான தற்காப்பு கலை போட்டிகளில், திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அச்சத்தினர்.
டில்லி, டால்க்கட்டோரா உள் விளையாட்டரங்களில், யுனைடெட் வேர்ல்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கழகம் சார்பில், கடந்த, 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை, முதலாவது தேசிய மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகள் நடந்தன. அதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில், கராத்தே, ஜூடோ மற்றும் தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் உள்ளிட்ட, தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள் நடந்தன. இந்திய பன்னிரு கனலறு கழகத்தின் சார்பில், 30க்கும் மேற்பட்ட, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
அவர்கள், பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு, 28 தங்கம், 21 வெள்ளி பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள், 21 பேர் பதக்கங்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்றவர்களுக்கு, UWMAFஅமைப்பின் ஆசிய தலைவர் மற்றும் ICO வின் ஆசிய தலைவர் தலைமை மகாகுரு விக்ரம் கபூர், பிரபல திரைப்பட நடிகரும், தற்காப்புகலை வல்லுனருமான வித்யூத் ஜாம்வால் ஆகியோர், வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும், இந்திய பன்னிரு கலனரு கல கழகத்தின் தலைவர் செந்தில்நாதன், பொதுச்செயலாளர் புவனேஸ்வரி, தொழில்நுட்பக் குழு நிர்வாகிகள் மற்றும் ஆசான்கள் ரதிராஜா சேகர், ஜெசிந்த் நியூட்டன், நிர்மல் ஆகியோரை பாராட்டி வாழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வரும் அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 13 ம் தேதி வரை, ஜெர்மனியில் நடைபெறும், உலக தற்காப்பு கலை போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு, தமிழக அரசு மூலம் உரிய உதவிகள் கிடைத்தால் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.