அந்த பெருமை முதல்வரையே சேரும்
சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல், சேர்மன் பிகே மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி கே சேகர்பாபு பேசியதாவது:
தமிழக பட்ஜெட்டில் அதிக அளவில் நிதி ஒதுக்கும் ஒரு துறை என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான். முதலமைச்சர் பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்குகிறார்.
அரசு பள்ளி என்றால் அவமான சின்னமாக இருந்த காலத்தை மாற்றி பெருமைப்படும் காலமாக மாற்றியுள்ளார் முதல்வர். கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதும் கடந்த 3 ஆண்டுகளில் மிதிவண்டி வழங்குவதற்காக 825 கோடி ஒதுக்கிய பெருமை முதல்வரையை சேரும்.
எனவே மாணவச் செல்வங்களே படியுங்கள் படியுங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ள முதல்வர் இருக்கிறார் என மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.