செய்தியாளர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டி
சென்னை ஆவடி, பருத்திப்பட்டு அருகே, மகாலட்சுமி கல்லூரி மைதானத்தில், பிரபல தொலைக்காட்சிகளின் செய்திப்பிரிவு ஊழியர்களுக்கான, இரண்டு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன.
அதில், சன் டிவி, சத்தியம் டிவி, புதிய தலைமுறை உள்ளிட்ட, பிரபல தொலைகாட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள், 16 அணிகளாக கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் போட்டியை, ஆவடி எம்.எல்.ஏ., நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் துவக்கி வைத்தனர்.
இறுதிப்போட்டியில், சன் டிவி அணி, பிளாக்ஷிப் யூடியூப் அணியினர் மோதினர்.
அந்த போட்டியை ஆவடி போலீஸ் கமிஷனர் கீ.சங்கர் துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்டோரை உற்சாகப்படுத்தினார்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சன் டிவி அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற பிளாக்ஷிப் அணிக்கும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.