பிரபாஸின் தி ராஜா சாப் ஐந்து மொழிகளில் ரிலீஸ்
பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியப் படமான ‘தி ராஜா சாப்’ படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, தயாரிப்பாளர்கள் ஒரு அருமையான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
‘தி ராஜா சாப்’ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது, படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு பிரமாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார்
மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும், “தி ராஜா சாப்” திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
குடும்ப பொழுதுபோக்கு படமான ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’, முதல் தெலுங்கு ஹாரர் காமெடி படமான ‘பிரேம கதா சித்ரம்’ மற்றும் காதல் நகைச்சுவை படமான ‘மஹானுபாவுடு’ போன்ற சூப்பர்ஹிட்கள் மூலம் புகழ் பெற்ற மாருதி, பிரபாஸுடன் இணைந்து, மீண்டும் ஒரு அட்டகாசமான படத்துடன் வருகிறார்.